ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சிங்கப்பெண்ணில் நீதான் என் மருமக என்று வாக்கு கொடுக்கும் மகேஷின் அம்மா.. ஆடி போன அன்பு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஒரு வழியாக அன்பு, ஆனந்தியை தான் காதலிக்கிறான் என்பது அவனுடைய அம்மா லலிதாவிற்கு தெரிந்து விட்டது.

ஆனந்தி மீது தீராத கோபத்தில் இருக்கும் அவர் இவர் என் வீட்டில் மருமகளாக வரவே முடியாது என சொல்கிறார்.

இது பற்றி அன்பு விடம் பேசும்போது ஆனந்தி உங்க அம்மா வாயால என்ன மருமகளே என்று கூப்பிட வைக்கிறேன் என சபதம் போடுகிறாள்.

இரண்டு பேரும் ஒரு வழியாக பிரச்சனையை சமாளிக்க தைரியத்தை கொண்டு வருகிறார்கள். அந்த நேரத்தில் தான் மகேஷ் புதிய திட்டத்துடன் வருகிறான்.

நீதான் என் மருமக என்று வாக்கு கொடுக்கும் மகேஷின் அம்மா

பிறந்தநாள் விழாவிற்கு கம்பெனியில் இருக்கும் அத்தனை பேருக்கும் லீவு கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பார்ட்டிக்கும் அழைத்திருக்கிறான்.

பார்ட்டியில் எல்லோரும் முன்னிலையிலும் ஆனந்தியை காதலிக்கிறேன் என்று சொல்வதற்கு மகேஷ் முடிவெடுத்து இருக்கிறான்.

மகேஷ் ஒரு புறம் இப்படி ஒரு முடிவு எடுக்க மித்ராவுக்கு சாதகமாக மகேஷின் அம்மா ஒரு முடிவு எடுக்கிறார். மித்ரா நான் மகேஷை காதலிக்கிறேன் என்று அவனுடைய அம்மாவிடம் சொல்லி விடுகிறாள்.

உடனே அவனுடைய அம்மாவும் நீ தான் என் வீட்டு மருமக என்று சொல்லி வாக்கு கொடுக்கிறார்.

பிறந்தநாள் பார்ட்டியில் மகேஷ் தன்னுடைய காதலை சொல்ல காத்திருக்க, மகேஷின் அம்மா அவனுக்கும் மித்ராவுக்கும் கல்யாண தேதியையே அறிவித்து விடுவார் போல. இரண்டு பேரில் யார் முந்துகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News