பறி போன மகளின் உயிர், விடுதலையான மாஜி மருமகன்.. உயிரை மாய்த்து கொண்ட VJ சித்ராவின் அப்பா!

VJ Chitra: மறைந்த சின்னத்திரை நடிகை VJ சித்ராவின் அப்பா காமராஜ் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சித்ரா.

அவர் நடித்த முல்லை கேரக்டர் தமிழகம் எங்கும் பெரிய அளவில் பேமஸ் ஆனது.

இந்த நிலையில் வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போது கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

அவருடைய கணவர் ஹேம்நாத் தான் இதற்கு காரணம் என கைது செய்யப்பட்டார்.

VJ சித்ராவின் அப்பா!

இதை தொடர்ந்து நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு எந்த ஆதாரமும் இல்லை என்ற காரணத்தை சொல்லி ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார்.

இது சித்ராவின் குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. மேல் முறையீடு செய்வதற்காக அவருடைய குடும்பமும், போலீசாரும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் தான் சித்ராவின் அப்பா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

Leave a Comment