செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

2024-ல் சம்பவம் செய்த 10 படங்கள்.. சிவகார்த்திகேயன் சினிமா கேரியரையே புரட்டி போட்ட அமரன்

Amaran: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் 2023 ஆம் ஆண்டு பார்க்கும் பொழுது 2024 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை குறைவு தான்.

எக்கச்சக்க படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள்தான் மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. அப்படி கடந்த வருடம் திரையுலகில் சம்பவம் செய்த 10 படங்களை பற்றி பார்க்கலாம்.

மெய்யழகன்: கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் தான் இருக்கிறது.

இதே மாதிரியான படம் மலையாளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் கருத்து.

தியேட்டரில் பெரிய அளவில் வெற்றி பெற விட்டாலும் OTT ரிலீசில் ரசிகர்களின் மனதை வென்றது.

லப்பர் பந்து: இந்த வருடம் ரிலீசான படங்களில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது லப்பர் பந்து தான்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான இந்த படம் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியை பார்த்தது.

அமரன்: நடிகர் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம் அமரன். பெரிய ஹீரோக்கள் படங்களில் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்தது.

OTT ரிலீசுக்கு பிறகும் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

மகாராஜா: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக ரிலீஸ் ஆன மகாராஜா அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்திய அளவில் மட்டும் இல்லாமல் இந்த படம் தற்போது சீன நாட்டில் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

ராயன்: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் இந்த வருடம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம். கலையான விமர்சனங்களை பெற்றாலும் திரைக்கதை நல்ல வரவேற்பு பெற்றது.

கொட்டுகாளி: அவருடன் படத்திற்கு பிறகு நடிகர் சூரிக்கு கொட்டுகாளி படம் நல்ல பிரேக் கொடுத்தது. இந்த படம் சர்வதேச அளவில் நிறைய விருதுகளையும் வாரிக்குவித்தது.

வாழை: கடந்த வருடம் மாமன்னன் படம் போல இந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த தரமான படம் வாழை. தென் தமிழக மக்களால் இந்தப் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

தங்கலான்: இந்த வருடத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் விக்ரம் நடித்த தங்கலான். ரிலீசுக்கு பிறகு இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

லவ்வர்: குட் நைட் படத்திற்கு பிறகு நடிகர் மணிகண்டனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்த படம் லவ்வர். இந்த படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கருடன்: விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரியை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம் கருடன்.

உண்மையை சொல்லப்போனால் விடுதலை படத்தை விட இந்த படத்தில் அவர் ஒரு தரமான ஹீரோவாக அசத்தியிருந்தார்.

Trending News