புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இந்திய வீரர்கள் எங்களை மிரட்டுனாங்க.. விராட் கோலி முதல் 11 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அடித்த ஆப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் இந்திய அணி மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப் இல்லாமல் ஆக்ரோசமாக நடந்து வருகிறார்கள் என மொத்த ஆஸ்திரேலியா அணியும் குற்றம் சாட்டியுள்ளது..

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் ஆஸ்திரேலியா விளையாடுவதற்கு 20 ஓவர்கள் வரை மீதம் இருந்தது. இதுதான் இப்பொழுது பெரும் பூதாகர பிரச்சினையாக மாறி உள்ளது.

இந்திய அணி ஆல் அவுட் ஆன பிறகு ஆஸ்திரேலியா அணி ஆட வந்தது. அப்பொழுது மீதம் 20 ஓவர்களுக்கு மேல் இருந்தது .ஆனால் அந்த 20 ஓவர் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய அணி சூழ்ச்சிகரமான விஷயங்கள் செய்தது. ஆட்டத்தின் நடுவே கிளவுஸ் மாற்றுவது, பேட்ஸ்மேனும், சகவீரரும் அடிக்கடி பேசிக் கொள்வது, குறுகிய இடைவெளியில் தண்ணீர் கேட்பது என நேரத்தை கடத்தியுள்ளனர்.

இப்படி ஆஸ்திரேலிய அணி நடந்து கொண்டது இந்திய வீரர்களை எரிச்சல் அடைய செய்தது. குறிப்பாக அந்த அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாசை ஆட்டத்தின் நேரத்தை வெகுவாக வீணடித்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாய் அவர் மீது கோபத்தில் இருந்தனர்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் உஸ்மான் கவஜா அவுட் ஆனார். அடுத்த நொடியே மொத்த வீரர்களும் சாம் கான்ஸ்டாசை நோக்கி பாய்ந்தனர். இதனால் இந்திய வீரர்கள் அனுபவம் இல்லாத இளம் வீரரை மிரட்டி பயமுறுத்துகிறார்கள் என ஆஸ்திரேலிய நிர்வாகம் குற்றம் சாட்டி இந்திய அணிக்கு அபராதம் விதிக்க கோரி பிரச்சனை செய்து வருகிறது.

Trending News