சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இனி எந்த புது படங்களிலும் நடிக்க போவதில்லை.. அஜித்குமார் கொடுத்த ஷாக், ஒரே நேரத்தில் எண்டு கார்டு போட்ட தல-தளபதி

Ajithkumar: நடிகர் அஜித்குமார் கொடுத்த பேட்டி நேற்றிலிருந்து பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அஜித் குமார் பெரிதாக இதுவரை பேட்டிகள் எதுவும் கொடுத்ததில்லை.

நேற்று அவருடைய கார் ரேசிங் அணி விளையாடி முடிந்ததும் அஜித் பேட்டி கொடுத்திருக்கிறார்.

அது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு எந்த புது படங்களிலும் நடிக்கப் போவதில்லை என அதிர்ச்சியான விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் அரசியல்தான் முக்கியம் என சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார். தற்போது அஜித் குமார் கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்த இருப்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

எண்டு கார்டு போட்ட தல-தளபதி

துபாயில் அஜித்குமார் 24H Dubai 2025 என்ற கார் ரேசிங் போட்டியில் தன்னுடைய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

நேற்று நடந்த இந்த போட்டியில் இவருடைய அணி ஏழாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ரேஸிங் முடிந்ததும் அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

அப்போது பேசிய அஜித் 18 வயதில் நான் கார் ரேசிங் தொடங்கினேன். அதன் பின்னர் சினிமாவுக்கு சென்று விட்டதால் என்னால் கார் ரேசிங்கில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

தற்போது மீண்டும் விளையாட வந்திருக்கிறேன். இந்த ரேசிங் முடியும் வரை எந்த புது படங்களிலும் நடிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார்.

ரசிகர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அஜித் அதிரடியாக குட் பேட் அக்லி படத்தை முடித்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது.

Trending News