Shrutika: நடிகை ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸ் 18 வது சீசனில் கலந்து கொண்டு பலதரப்பட்ட மக்களிடமும் வரவேற்பை பெற்றார்.
ஒரு தமிழ் பெண்ணாக இவ்வளவு நாட்கள் அவர் உள்ளே தாக்குப் பிடித்தது பெரிய அளவில் வைரலானது. பிக்பாஸ் மற்றும் சல்மான் கானை தமிழில் பேச வைத்து தமிழக ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார்.
அவர் விளையாடிய கேமாக இருக்கட்டும், மற்றவர்களிடம் பழகும் விதமாக இருக்கட்டும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி எதார்த்தமாக இருந்தாரோ அதே எதார்த்தத்தை பிக் பாஸ் வீட்டிலும் காட்டினார்.
96 நாட்களுக்கு வாங்கிய சம்பளம்
டாப் பைனல் லிஸ்டில் கண்டிப்பாக ஸ்ருதிகா இருப்பார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிட் வீக் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
இவ்வளவு நாள் டிஆர்பி காகத்தான் அவரை உள்ளே வைத்திருந்தார்கள், இவர்கள் எப்படி தமிழர்களை ஜெயிக்க வைப்பார்கள் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் ஸ்ருதிகா பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
இவர் ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளமாக பேசி உள்ளே சென்று இருக்கிறார். 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் கிட்டத்தட்ட 20 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.