ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மூன்றே மாதத்தில் 25 கிலோ எடையை குறைத்த அஜித்.. சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்

Ajithkumar: நடிகர் அஜித்குமார் உடல் எடையை குறைத்தது தற்போது பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. பொது மக்களில் பலரும் எப்படி இவர் எடையை குறைத்து இருப்பார் என அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கான பதிலை பிரபலம் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அஜித்குமாருக்கு உடல் எடையை குறைப்பது இது ஒன்றும் புதிதல்ல.

ஏற்கனவே வரலாறு படத்தின் போது உடல் எடையை குறைத்து பெரிய அளவில் மாஸ் காட்டினார்.

25 கிலோ எடையை குறைத்த அஜித்

இதைத்தொடர்ந்து இப்போதுதான் மீண்டும் தன்னுடைய உடல் இளைப்பு மூலம் அதிக பசு பொருளாகி இருக்கிறார்.

அஜித் எடை குறைத்ததற்கு முக்கிய காரணம் கார் ரேசிங் தான்.

தனக்கு விருப்பமான விளையாட்டை விளையாட தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளத்தான் மூன்று மாதத்தில் 25 கிலோ எடையை குறைத்து இருக்கிறார்.

தற்போது இது குறித்து வலைப்பேச்சு சேனல் பிஸ்மி பேசியிருக்கிறார். அதில் அஜீத் இந்த மூன்று மாதங்களுக்கு வெறும் சூடான தண்ணீர் மட்டுமே குடித்ததாக சொல்லி இருக்கிறார்.

உடலுக்கு தேவையான ஆற்றலை வைட்டமின் மாத்திரை மற்றும் புரோட்டின் பவுடர் கொண்டு பெற்றுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவரின் ஆலோசனை படித்தான் இதை செய்திருக்கிறார் என பிஸ்மி கூறியிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் என்று எதுவும் இல்லை.

ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் இது குறித்து பேட்டியளித்திருக்கிறார்.

அதில் உடல் எடை குறைய இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவது ரொம்பவும் ஆரோக்கியம் இல்லாத விஷயம்.

கண்டிப்பாக உடல் நலத்தின் மீது அதிக அக்கறை கொண்ட அஜித் இதை செய்திருக்க மாட்டார் என விளக்கம் அளித்திருக்கிறார்.

Trending News