ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரசிகர்களுக்கு க்யூட்டாக கொட்டு வைத்த அஜித்.. துபாயிலிருந்து வெளியான வீடியோ

Ajithkumar: பூனைக்கு மணி கட்டுவதில் நடிகர் அஜித்குமார் எப்போதுமே கை சேர்ந்தவர். தன்னுடைய ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறுகிறார்கள் என்று தெரிந்தாலும் உடனே தன்னுடைய கண்டிப்பை காட்டி விடுவார்.

தல என்று சொல்ல வேண்டாம் எந்த இடத்திலும், தன்னுடைய பெயருக்கு முன்னால் கடவுளே என்ற வார்த்தை வரக்கூடாது என அவர் அறிக்கை விட்டதெல்லாம் இதற்குத்தான்.

அப்படித்தான் இப்போது கார் ரேசிங்கில் இருக்கும்போது கூட தன்னுடைய ரசிகர்களுக்கு ரேடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

துபாயிலிருந்து வெளியான வீடியோ

ஆனால் இது எந்த அதிருப்தியிலும் வெளியானது கிடையாது. க்யூட்டாக தன்னுடைய ரசிகர்களுக்கு அதில் அறிவுரை சொல்லி இருக்கிறார்.

அஜித் அந்த வீடியோவில் தன்னுடைய ரசிகர்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்.

நல்லா படிங்க, குடும்பத்தை பாருங்க, டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, பிடிச்ச விஷயத்தை செய்யுங்க என்று சொல்லி இருக்கிறார்.

பிடித்த விஷயத்தை செய்யும்போது தோல்வி அடைந்தாலும் மனம் தளராதீங்க என்று சொல்லி இருக்கிறார். மேலும் லவ் யூ ஆல், சண்டை போடாதீங்க குடும்பத்தை பாருங்க என அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த வீடியோவை அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Trending News