Reshma Muralidharan: நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் ஹீரோ – ஹீரோயின் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் இடையே பெரிய பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது தான் உள்ளம் கொள்ளை போகுதே.
குடும்ப சூழ்நிலை காரணமாக அதிக வயதை தாண்டிய ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது அதை தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் தான் இதன் கதைக்களம்.
இது இந்தியில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. தற்போது இந்த சீரியலை நேரடி தமிழ் சீரியல் ஆக கொண்டு வந்தார்கள்.
இதில் ஹீரோவாக நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோயினாக ரேஷ்மா முரளிதரன் நடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 148 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா!
இதற்கு ஜெய் ஆகாஷ் காலில் அடிபட்டது தான் காரணம் என சொல்லப்படுகிறது. வலியை பொறுத்துக் கொண்டு பல எபிசோடுகளில் இவர் நடித்திருக்கிறார்.
அதன் பின்னால் முடியாது என்ற கட்டம் வரும்போது ஜெய் ஆகாஷ் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவர் விலகியதால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ரேஷ்மாவும் சீரியல் ரசிகர்களிடையே பிரபலமான ஹீரோயின் தான். அப்படி இருக்கும் பொழுது ஹீரோவை மாற்றிவிட்டு இந்த சீரியலை கொண்டு போய் இருக்கலாம்.
ஜெய் ஆகாஷ் ஒருவர் விலகியதற்காக ரேஷ்மாவை பொருட்படுத்தாமல் எப்படி சீரியலை நிறுத்தலாம் என கேள்வி எழுந்திருக்கிறது.
இரண்டு பேரின் ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை மாற்றி மாற்றி கருத்து மோதலாக தெரிவித்து வந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் ரேஷ்மாவும் ஜீ தமிழ் சேனலுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுபவர்களை ஆதரித்து வருகிறார்.
இதிலிருந்து ஜெய் ஆகாஷுக்காக சீரியலை நிறுத்தியதால் அவர் பெரிய மன வருத்தத்தில் இருப்பது தெரிய வருகிறது.