105 நாட்களை தாண்டி பிக் பாஸ் சீசன் 8 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டு 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுகளை வென்றார்.
2வது சௌந்தர்யாவும்,3வது VJ விஷாலும் இடம் பிடித்தனர். இறுதி வாரத்தில் பரபரப்பான பிக் பாஸ் வீடு பல விளையாட்டுகளை வைத்து நேர்தியாக டைட்டில் வின்னரை தேர்வு செய்தது.
ஆனால் கடந்த ஏழு சீசனை வழி நடத்திய கமலஹாசனை பெருமைப்படுத்த மறந்து விட்டது. இது கமல் கேரியரில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் என்கிறது கோலிவுட்.
ஆனால் இதே நேரத்தில் விஜய் சேதுபதி கமலை மறக்காமல் அவர் போட்ட பாதை என்பதால் நான் நடப்பதற்கு சுலபமாக இருக்கிறது என்று பெருமை படுத்தி உள்ளார்.
விஜய் டிவி கமலை வியாபாரமாக பார்த்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி தன் திரையுலகத்தில் குருவாக பார்த்து கௌரவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
அடுத்த சீசனில் விஜய் சேதுபதி தொடர்பாரா இல்ல சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு வாய்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கலாம்.