சமீபத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பிசிசிஐ முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு பல இடங்களில் ஆபத்தாக முடியும் என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்து வருகிறார்.
ஒரு தொடரில் நன்றாக விளையாடவில்லை என்றால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க கூடாது, மாறாக அவர்களது பார்மை மீட்டெடுக்க உதவி செய்ய வேண்டும். இப்பொழுது இந்திய அணியில் முன்னாள் வீரர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
ஐசிசி நடத்தும் போட்டியான சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.
மொத்தமாக இந்தத் தொடரில் 15 போட்டிகள் நடக்கும் எட்டு அணிகள் மோதுகின்றன. இரண்டு குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் அரை இறுதி போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பைனல் மார்ச் ஒன்பதாம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களை இந்திய அணி தொடர்ந்து தாழ்த்தி பேசி வருகிறது. இது முற்றிலும் தவறான ஒன்று. சென்ற முறை சாம்பியன் டிராபியில் ரோகித் சர்மா 60 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார் என்பதை மறந்து விட வேண்டாம் என முகமது கைப் எச்சரிக்கிறார்.