வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிங்கப்பெண்ணில் வசமாக சிக்கும் மித்ரா.. பின்னி பெடலெடுக்கும் மகேஷ், க்ரைம் லிஸ்ட் ஏறிட்டே போகுதே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆட்டை கடித்து. மாட்டை கடித்து கடைசியில் மனுஷனை கடிப்பது என்று சொல்வார்கள்.

அதை தான் எப்போதும் மித்ரா செய்திருக்கிறாள். இவ்வளவு நாளாக ஆனந்தி மற்றும் அன்புவுக்கு தான் மித்ரா எக்கச்சக்க சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால் இந்த முறை அவள் கை வைத்திருப்பது வார்டனிடம். வார்டனின் பெரிய பொக்கிஷமாக இருக்கும் புடவை மட்டும் கிளுகிளுப்பை எடுத்து ஒளித்து வைத்து விடுகிறாள்.

வார்டன் ஆரம்பத்தில் இந்த பொருளை தேடும் போது ஆனந்தி அதை பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மாலையில் வார்டன் அதை நினைத்து அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் ஆனந்தி ரொம்பவே மனசு உடைந்து போய்விடுகிறாள்.

வசமாக சிக்கும் மித்ரா

எப்படியாவது அந்த பொருளை தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என தன்னுடைய தோழிகளுடன் ஹாஸ்டல் முழுக்க தேடுகிறாள்.

கடைசியில் மித்ராவின் பாத்ரூமில் அந்த பொருளை கண்டுபிடிப்பது போல் நேற்றைய எபிசோடு முடிந்திருந்தது.

இந்த நிலையில் மகேஷ் வார்டனை தேடி ஹாஸ்டலுக்கு வருவது போல் இன்றைய ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது.

மகேஷ் உள்ளே வரவும் ஆனந்தி மித்ரா தான் வார்டனின் முக்கியமான பொருளை ஒளித்து வைத்திருக்கிறாள் என்ற விஷயம் வெளியில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கண்டிப்பாக மகேஷ் மித்ரா மீது அதிக கோபம் அடைவான். ஏற்கனவே மித்ராவை வெறுத்து ஒதுக்கும் மகேஷ் இந்த சம்பவத்திற்கு பிறகு அவளை ஓட விடப் போகிறான் என்பது தெரிகிறது.

Trending News