வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிங்கப்பெண்ணில் மகேஷின் அம்மா கையில் சிக்கும் வார்டன்.. அன்பு-ஆனந்தி-மகேஷ் முக்கோண காதலுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அன்பு ஆனந்தி இருவருமே அன்புவின் அம்மா திருடர்களிடம் பறி கொடுத்த செயினை கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

இதனால் அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் காட்சிகள் மிஸ் ஆவது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் பரபரப்புக்கு தீனி போடும் வகையில் வார்டனின் சீன்கள் இருக்கிறது.

முக்கோண காதலுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

மகேஷ் வார்டனை தேடி ஹாஸ்டலுக்கு வந்து போவதை மித்ரா மகேஷின் அம்மாவிடம் சொல்லி விடுகிறாள்.

மகேஷ் எதனால் சாதாரண ஒரு ஹாஸ்டல் வார்டனை சந்திக்க செல்ல வேண்டும் என்ற சந்தேகம் மகேஷ் அம்மாவுக்கு வருகிறது.

இதனால் கூடிய சீக்கிரம் அவரே வார்டனை சந்திக்க ஹாஸ்டலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

ஒரு வேளை வார்டன் பற்றிய உண்மை மகேஷின் அம்மாவுக்கு தெரியும் என்றால் சீரியல் பெரிய அளவில் சூடு பிடிக்கும்.

வார்டன் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட பிறகு தான் மகேஷ் தன் காதலைப் பற்றி தரமான முடிவை எடுப்பான் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா போட்டிருந்த செயினை ஆனந்தி கண்டுபிடித்துக் கொடுத்து விடுவாள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அன்புவின் அம்மாவும் மனம் மாறி ஆனந்தியை ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அன்பு ஆனந்தி காதலை தாண்டி வார்டன் பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ளத்தான் தற்போது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த ஆர்வத்திற்கு இயக்குனர் தீனி போடுகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News