Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் வார்டன் எடுத்திருக்கும் முடிவு எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
வார்டன் மற்றும் மகேஷ் இருவருக்கும் இடையேயான பிளாஷ்பேக் ரசிகர்களால் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டது.
எப்படியும் அடுத்தடுத்த எபிசோடுகளில் இந்த ஃப்ளாஷ் பேக் தான் வரும் என்பதற்கு ஏற்ற மாதிரி காட்சிகளும் வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அது மொத்த நேற்றைய எபிசோடில் தலை கீழாக மாறியிருக்கிறது. ஏற்கனவே விருப்பமில்லாத ஆனந்தியே மகேஷ் கட்டாயப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு வித எரிச்சலை கொடுக்கிறது.
மகேஷை விட கிரிமினலா யோசிக்குறாங்களே!
போதாத குறைக்கு வார்டன் மகேஷுக்கு துணை போவது இன்னும் எரிச்சலாக தான் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் வார்டன் ஆனந்தியின் அப்பாவுக்கு போன் பண்ணுகிறார்.
நானும், மகேஷும் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து ஒரு விஷயத்தை பேச இருக்கிறோம் என சூசகமாக சொல்கிறார்.
எப்படியும் ஆனந்தியின் வீட்டுக்கு நேரடியாக போய் பெண் கேட்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விட்டது.
மகேஷின் காதலுக்கு அவனுடைய அம்மா எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் வார்டன் ஆனந்தியின் வீட்டுக்கே சென்றேன் பெண் கேட்க இருக்கிறார்.
எல்லாத்துக்கும் முன்பாக ஆனந்தியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வா ர்டன் தெரிந்து கொள்ள முயற்சிக்காதது பெரிய ஏமாற்றம்தான்.