கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபுவை யாரும் கண்டு கொள்ளாத சூழ்நிலை உருவாகியது போல தெரிகிறது . மனுஷன் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது நெருங்கிய வட்டாரங்களுக்கே தெரியவில்லை. எந்த ஒரு தயாரிப்பாளரும், ஹீரோவும் இதுவரை அவரை அணுகவே இல்லையாம்.
விஜய்யின் கோட் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்திருக்கிறது. அப்போதே ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் அடுத்த படத்திற்கு 5 கோடிகளை அட்வான்ஸ் ஆக கொடுத்துள்ளார் ஆனால் வெங்கட் பிரபு அதை நிராகரித்து விட்டாராம். அந்த நேரத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் கூட வரிசையில் நின்றனர்.
இப்பொழுது அடுத்த படம் என்னவென்று வெங்கட் பிரபு அறிவித்தால் மட்டும்தான் உண்டு. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தார். அதுதான் எஸ்கே 25 படம் என்று ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால் அதற்கும் இப்பொழுது சிவகார்த்திகேயன் ஆப்பு அடித்துள்ளார்.
சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் சந்தித்துக் கொண்டனர். அங்கே செலிபிரிட்டிகள், விஐபிகள் மீட் பண்ணும் ஒரு ரெஸ்ட்ரோ பாரில் இருவருக்கும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு தலையில் குண்டை தூக்கி போட்டுள்ளார்.
சுதா கொங்காராவின் 1965 படம், ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம், மற்றும் சிபி சக்கரவர்த்தி உடன் இணையும் படம் என அடுத்தடுத்து இரண்டு வருடங்களுக்கு தான் பிசியாக இருப்பதாகவும். அதனால் வெங்கட் பிரபுவுக்கு இரண்டு வருடங்கள் கழித்து கால் சீட் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத வெங்கட் பிரபு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.