Ilayaraja: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள், அது தான் தற்போது இளையராஜாவுக்கு நடந்திருக்கிறது.
என்னுடைய பாடல்களை அனுமதியின்றி யாரும் உபயோகிக்க முடியாது என காப்புரிமை கேட்டு இளையராஜா எத்தனையோ பஞ்சாயத்துகளை செய்திருக்கிறார்.
ஆனால் இப்போது இளையராஜாவின் மேலே பஞ்சாயத்து வந்திருக்கிறது. இளையராஜாவின் பாடல்களில் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் ஒன்றிற்கு உரிமை கொண்டாட அவரால் இனி முடியாது.
வெளியாட்கள் யாரும் தன்னுடைய பாடலை உபயோகித்தால் இளையராஜா வரிஞ்சு கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்.
ஆனால் தன்னுடைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு மட்டும் இது விதிவிலக்கு.
இதைத்தான் கர்மான்னு சொல்வாங்க போல
அந்த அசட்டையில் தான் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கும் அகத்தியர் படத்தில் என் இனிய பொன் நிலாவே பாடலை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.
இதற்கு சரிகம நிறுவனம் டெல்லி கோட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. அதாவது மூடுபனி படத்தில் வரும் அத்தனை பாடல்களின் காப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கு தான் இருக்கிறதாம்.
இதனால் என் இனிய பொன் நிலாவே பாடலை யுவன் சங்கர் ராஜா உபயோகிக்க முடியாது.
உண்மையை சொல்லப் போனால் இளையராஜா இசையமைத்த இந்த பாட்டுக்கு அவரிடமே காப்புரிமை இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.