Sivakarthikeyan: பராசக்தி டைட்டிலுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் அந்த பட குழு போராடி வருகிறது. என்ன ஆனாலும் சிவாஜி பட டைட்டிலை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டு விட்டது.
சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று நினைக்கலாம். ஆனால் சிவாஜி பட டைட்டிலை பொறுத்த வரைக்கும் அதிகமாக பாடுபட்டது தனுஷ் தான்.
பழைய படங்களின் டைட்டிலை அதிகமாக வைத்த ஹீரோக்களில் தனுஷ் முதல் இடத்திலும், சிவகார்த்திகேயன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
சிவாஜி பட டைட்டிலுக்காக போராடிய தனுஷ்
ஒரு காலகட்டத்தில் தனுஷ் வரிசையாக பழைய படங்களின் டைட்டிலை தான் தன்னுடைய படங்களுக்கு வைத்தார்.
படிக்காதவன், பொல்லாதவன், மாப்பிள்ளை என பெரிய லிஸ்ட் நீண்டு கொண்டே போகும், அது அவருடைய முன்னாள் மாமனார் படங்களின் டைட்டில் என்பதால் அவருக்கு ஈசியாக கிடைத்திருக்கிறது.
சிவாஜி நடித்த பெரிய அளவில் வெற்றி பெற்ற திருவிளையாடல் டைட்டிலையும் வாங்க தனுஷ் போராடி இருக்கிறார்.
ஆனால் சிவாஜியின் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒரு வழியாக பேசி பஞ்சாயத்து முடிந்து திருவிளையாடல் ஆரம்பம் என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.