Krish: தமிழ் சினிமாவின் ரொம்ப கூலான ஜோடிகளின் லிஸ்டில் இருப்பவர்கள் சங்கீதா- க்ரிஷ் தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் காதல் திருமணம் என்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவருமே இணைந்து எந்த ஒரு படத்திலும் பணியாற்றவில்லை.
சங்கீதா முழுக்க முழுக்க நடிப்பு துறையில் இருப்பவர். க்ரிஷ் பின்னணி பாடகர். எப்படி இவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்பது பலருடைய கேள்வியாகவும் இருந்தது.
சங்கீதா மேல எனக்கு லவ் எல்லாம் வரல
அது மட்டும் இல்லாமல் சங்கீதா அவருடைய கணவரை விட வயதில் மூத்தவர் என்றும் பேசப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் சங்கீதா இதை தெளிவுபடுத்தியிருந்தார்.
அவருடைய கணவர் க்ரிஷ் அவரை விட ஒரு வயது பெரியவர் என்று சொல்லி இருந்தார். சமீபத்தில் க்ரிஷ் சித்ரா லட்சுமணனுக்கு கொடுத்த பேட்டியில் இவர்களுடைய காதல் கதை பற்றி சொல்லியிருக்கிறார்.
அதாவது இவருக்கு சங்கீதாவை பார்த்தவுடன் காதல் எல்லாம் வரவில்லையாம். ஒரு விருது விழாவில் சங்கீதாய் அவருக்கு விருது கொடுத்தாராம்.
அதன் பின்னர் நடந்த பார்ட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்களாம். சங்கீதா தான் இவருடைய நம்பரை நடிகை லட்சுமி ராயிடமிருந்து வாங்கி இவருக்கு போன் செய்து பேசியதாக சொல்லி இருக்கிறார்.
15 வருட காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு க்ரிஷ் இப்போதைய போட்டியில் அவங்க மேல எனக்கு லவ் எல்லாம் முதல்ல வரலை என்று சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.