Vignesh Shivan: ஏதாச்சும் பண்ணி முன்னேறிடலாம்னு பார்த்தா விக்னேஷ் சிவன் கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா வெடிக்குது.
வதந்திகள், சர்ச்சைகள் என்பதை தாண்டி தற்போது சமூக அக்கறை விக்கிக்கு இல்லை என்று ரசிகர்கள் பேசும் அளவுக்கு சம்பவம் நடந்திருக்கிறது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.
வெளுத்து விட்ட குழந்தை நல மருத்துவர்கள்!
அதில் தன்னுடைய படத்திற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு சில பல காரணங்களால் அந்த ப்ராஜெக்ட்டும் கைகூடாமல் போனது.
அதன் பின்னர் இதுவரை அவருடைய இயக்கம் குறித்து எந்த அப்டேட்டுகளும் இல்லை. இந்த நிலையில் நயன்தாராவை சுற்றி எழுந்த சர்ச்சைகள் அத்தனையிலும் விக்னேஷ் சிவனும் சம அளவில் அடி வாங்கினார்.
இந்த நிலையில் அவர் யோசிக்காமல் நடித்த விளம்பரம் ஒன்று தற்போது அவருக்கே ஆப்பாக அமைந்துவிட்டது.
விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஒரு பெரிய பிஸ்கட் பிராண்ட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது இந்த விளம்பர வீடியோவை சுட்டிக்காட்டி நிறைய குழந்தை நல மருத்துவர்கள் தயவு செய்து இந்த பிஸ்கட்டை உங்களுடைய குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் அதிக சர்க்கரை, வேதியல் பொருள் இந்த பிஸ்கட்டில் கலந்து இருக்கிறது. இதனால் தான் இதை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்கள்.
இதை பார்க்கும் இணையவாசிகள் இரண்டு குழந்தைங்களுக்கு அப்பாவாக இருக்கும் விக்னேஷ் சிவன் இந்த பிஸ்கட் விளம்பரத்தில் எப்படி நடித்தார். காசுன்னா என்ன வேணா பண்ணிடுவீங்களா, சமூகப் பொறுப்பு ஒன்னும் உங்களுக்கு கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.