செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

சிங்கப்பெண்ணில் கொளுத்தி போட்ட மித்ரா, ஆட்டத்தை ஆரம்பித்த மகேஷின் அம்மா.. கம்பெனியை விட்டு வெளியேறும் ஆனந்தி?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. எப்போதுமே மித்ரா தன்னுடைய வில்லத்தனத்தை காட்டினால் கோபம் தான் வரும்.

ஆனால் இந்த முறை மித்ரா ஏதாவது ஒரு மோசமான வில்லத்தனத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் ஆனந்தி மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் வார்டன் மகேசு உடன் சேர்ந்து கொண்டு கல்யாணம் வரை திட்டம் போட்டு விட்டார்.

கம்பெனியை விட்டு வெளியேறும் ஆனந்தி?

அதே நேரத்தில் ஆனந்தி மற்றும் அன்பு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார்கள். கல்யாணத்திற்கு அழகப்பன் இடம் பேசியதை மகேஷ் தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டான்.

இந்த முறை மகேஷின் அம்மா பொறுமையாக இருக்க போவதாக இல்லை. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அவனுடைய அம்மா கம்பெனிக்கு கிளம்புகிறார்.

அதே நேரத்தில் ஆனந்தியும் வார்டன் கொடுத்த சாப்பாடுடன் மகேஷ் ரூமுக்குள் இருக்கிறாள். இது கண்டிப்பாக மகேஷின் அம்மாவை அதிக கோபப்படுத்துகிறது.

இதனால் ஆனந்தியை உடனே கம்பெனியை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று சொல்கிறார். மகேஷ் அம்மா பொறுமையா இருங்க எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று சொல்கிறான்.

ஆனால் மகேஷின் அம்மா கருணாகரனிடம் ரொம்பவே உறுதியாக ஆனந்தியை வெளியே அனுப்புங்க என்று சொல்கிறார். உடனே மகேஷ் அப்போ நானும் கம்பெனியை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்கிறான்.

இதிலிருந்து இன்று ஒரு பரபரப்பான எபிசோடு காத்திருப்பது நன்றாக தெரிகிறது. மகேஷிடம் மாட்டிக்
கொண்டு சிக்கி தவிப்பதற்கு ஆனந்தி கம்பெனியை விட்டு போனாலே நன்றாக இருக்கும்.

Trending News