ஏ ஆர் முருகதாஸ், சுதா கொங்காரா என பெரிய ப்ராஜெக்ட்டுகள் தான் சிவகார்த்திகேயன் இப்பொழுது பண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு அவரது கால் சீட் கிடைப்பது கடினம். அதனால் இரண்டு இயக்குனர்கள் அவரை சுமூகமாக கழட்டி விட்டுள்ளனர்.
தொட்டதெல்லாம் தொடங்கும் இடத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் படம் கொடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பின் இவருக்கு சம்பளம் கிடையாது. லாபத்தில் பங்கு மட்டும்தான் என்ற அளவில் வளர்ந்து விட்டார். இப்பொழுது சுதா கொங்காராவின் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயனின் லிஸ்டில் இருந்த இரண்டு இயக்குனர்கள், அவரை விட்டுவிட்டு வேறு படத்தை நோக்கி சென்று விட்டனர். சிவகார்த்திகேயனை நம்பினால் ஒரு வருடம் காத்து கிடைக்க வேண்டும் என இருவரும் அடுத்தடுத்த கதைகளை இயக்க போய்விட்டார்கள்.
சிவகார்த்திகேயனின் நண்பனான சிபி சக்கரவர்த்தி அவருக்கு ஒரு கதையை சொல்லிவிட்டு நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நேரம் கூடி வராததால் தெலுங்கு நடிகர் நாணியுடன் ஒரு படம் பண்ண கமிட் ஆகியுள்ளார். அதனால் அந்த படத்தை முடித்த பின் தான் சிவகார்த்திகேயன் படம் பண்ண வருவாராம்.
சிபி சக்கரவர்த்தியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயன் படத்தை ஒதுக்கி வைத்து விட்டு வேறு படத்தை நோக்கி செல்ல உள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்துக்கு பின்னர் வெங்கட் பிரபு மற்றும் சிவா ஒரு படம் பண்ணுவதாக இருந்தது ஆனால் அதற்கும் இப்பொழுது நேரம் கூடி வரவில்லை.