சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

சிங்கப்பெண்ணில் உண்மையை சொல்லும் பார்வதி.. மிரண்டு போன மகேஷ், மிருகமாய் மாறும் தில்லைநாதன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது.

கடந்த வாரத்திலிருந்து வார்டன் பற்றிய ஃப்ளாஷ்பேக் வெளியே வரும் என நேயர்கள் அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதற்கு தீனி போடும் விதமாக மகேஷின் அம்மா பார்வதி வார்டனை நேருக்கு நேர் பார்த்து விட்டார்.

உண்மையை சொல்லும் பார்வதி

தில்லை நாதனிடம் இனியும் நான் பொறுக்க மாட்டேன் என்று சொன்னதன் மூலமே பார்வதி ருத்ர தாண்டவம் ஆடப்போவது தெரிந்து விட்டது.

நேற்றைய எபிசோடில் மித்ரா மகேஷ் வார்டனுடன் வெளியே போனதை போன் பண்ணி சொல்லி விடுகிறாள். பார்வதிக்கு கோபம் உச்சிக்கு ஏறுகிறது.

மகேஷ் வந்தவுடன் உனக்கு யார் அந்த வார்டன், அவங்களுக்கு கூப்பிட்டு எப்படி நீ பெண் கேட்க போவாய் என்று பிரச்சனையை ஆரம்பிக்கிறார்.

மகேஷ் அவனுடைய அம்மாவிடமே வார்டன் எனக்கு அம்மா மாதிரி என்று சொல்கிறான். இது பார்வதிக்கு பெரிய அளவிலான கோபத்தை ஏற்படுத்துகிறது.

உனக்கு அம்மா மாதிரின்னா தயவு செஞ்சு அவ கூடவே போயிடு என்று சொல்கிறார். உடனே தில்லைநாதன் கோபம் வந்து பார்வதியை அடிக்க கை ஓங்குகிறார்.

இந்த விஷயம் மகேஷுக்கு ரொம்பவும் புதுசாக இருப்பதால் அதிர்ச்சியாக பார்க்கிறான்.

தில்லைநாதன் என்ன செய்தாலும் பரவாயில்லை இன்று பார்வதி மகேசை அந்த வார்டன் எங்கே இருக்கிறாளோ அங்கேயே போய் நீ இருந்துக்கோ என்று சொல்கிறார்.

மகேஷும் இந்த முடிவுக்கு சரி என்று சொல்வது போல் இருக்கிறது. இதனால் விரைவில் பார்வதி அல்லது தில்லைநாதன் வார்டன் பற்றிய உண்மையை சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News