Trisha: அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த கயல் காதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கிட்டதட்ட பல வருடங்களுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தான் த்ரிஷா அதிகம் கவனத்தைப் பெற்றார்.
ஆனால் அதற்கு முன்பே த்ரிஷா நடிப்பில் சம்பவம் பண்ணிய ஆறு கேரக்டர்கள் இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.
96 (ஜானு): நடிகை திரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடியது 96 படத்தில் தான். இந்த படத்தில் திரிஷா ஏற்று நடித்த ஜானு கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்புக்கு இணையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சாமி (புவனா): த்ரிஷா மற்றும் விக்ரம் கெமிஸ்ட்ரி எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல தான்.
சாமி படத்தில் புவனா என்னும் கேரக்டரில் திரிஷா நடித்திருப்பார். இதில் விக்ரம் திரிஷாவை மிளகாய் பொடி மாமி என கிண்டல் அடிப்பது அதிகமாக ரசிக்கப்பட்டது.
கில்லி (தனலட்சுமி): கில்லி படத்தின் தனலட்சுமி அதிக செல்வாக்கை பெற்றது என்னவோ இணையதளத்தின் ஆதிக்கங்கள் அதிகமான பிறகு தான்.
இக்கட்டான சூழ்நிலையில் விஜய் இடம் கார பொறி கேட்பது, விஜய்யின் அப்பாவிடமே அவருடைய குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைப்பது என இணையவாசிகளின் செல்ல குட்டி ஆகி போனார் வேலுவின் தனலட்சுமி .
அபியும் நானும் (அபி): அப்பா மற்றும் மகளுக்கு இடையேயான அழகான அன்பை எடுத்துச் சொன்ன படம் தான் அபியும் நானும்.
இந்த படத்தில் அபி என்னும் கேரக்டரில் பிரகாஷ்ராஜின் அசுரத்தனமான நடிப்புக்கு இணையாக நடித்திருப்பார் திரிஷா.
கொடி: கொடி படத்தில் திரிஷா நடித்த ருத்ரா கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.
தனுஷை கொலை செய்யும் காட்சியாக இருக்கட்டும், தனுஷின் மரணத்திற்கு பிறகு முழு வில்லியாக மாறும் காட்சியாக இருக்கட்டும் நடிப்பில் கலக்கி இருப்பார்.
ஜெஸ்ஸி: கௌதம் மேனன் உருவாக்கிய கதாநாயகிகளுக்குள் போட்டி வைத்தால் கண்டிப்பாக ஜெஸ்ஸிக்கு தான் முதலிடம்.
அழகு, திமிர், காதல், குழப்பம் என அத்தனை காட்சிகளிலும் த்ரிஷா சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருப்பார்.