மெட்டி ஒலி டூ பிளே ஸ்கூல் ஓனர்.. மாணிக்கம் தங்கச்சி நிர்மலாவை நியாபகம் இருக்கா?

Metti Oli: மெட்டி ஒலி சீரியலை அவ்வளவு சீக்கிரம் தமிழ் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. சன் டிவி ஒரு காலகட்டத்தில் டிஆர்பி வேட்டையாடியது இந்த சீரியல் மூலம் தான்.

சன் டிவியை தாண்டி வேறு எந்த சேனலையும் மக்கள் பார்க்காதவாறு செய்ததில் முக்கிய பங்கு மெட்டி ஒலிக்கு உண்டு.

சிதம்பரம் அவருடைய மகள்கள் தனம், சரோ, லீலா, விஜி, பவானி. இவர்களை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைகள் அவர்களுடைய உறவினர்கள் என தரமான குடும்ப கதையை வழங்கியது இந்த சீரியல்.

நிர்மலாவை நியாபகம் இருக்கா?

அதிலும் சரோவின் கணவர் மாணிக்கம், அவருடைய அம்மா ராஜம், தங்கை நிர்மலாவை கரித்துக் கொட்டாத பெண்களே இல்லை என்று சொல்லலாம்.

இதில் நிர்மலா கேரக்டரில் நடித்த அருணா தேவி அப்படியே ஒரு குடும்பத்தின் நாத்தனார் எப்படி இருப்பாரோ அதை பிரதிபலித்திருப்பார்.

நிர்மலா இந்த சீரியலுக்குப் பிறகு திருமுருகனின் கல்யாண வீடு மற்றும் இன்னும் பல சீரியல்களிலும் நடித்தார். இவருக்கு திருமணம் ஆகி தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

சீரியலை தாண்டி ஜோடி நம்பர் ஒன் மற்றும் மஸ்தானா மஸ்தானா நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தற்போது அருணா தேவி ப்ளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறாராம். தன்னுடைய மகள்களை பிளே ஸ்கூலில் படிக்க வைக்கும் போது அவருக்கு இந்த ஐடியா வந்திருக்கிறது.

வருஷத்திற்கு 20 பிள்ளைகளை மட்டும் தான் அட்மிஷன் போட்டு இந்த பள்ளியை நடத்தி வருகிறாராம். மெட்டிஒலி இரண்டாம் பாகம் வந்தால் கண்டிப்பாக மீண்டும் நாத்தனார் நிம்மியை எல்லோரும் பார்க்கலாம்.

Leave a Comment