Bad Girl: அமரனுக்கு ஜாதி வேண்டாம், உங்க அசிங்கத்தை காட்டுவதற்கு மட்டும் ஜாதி வேண்டுமா என மெட்டிஒலி நடிகர் விஷ்வா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சின்னத்திரை நடிகர் விஷ்வா மெட்டி ஒலி சீரியலில் செல்வம் கேரக்டர் மூலம் பிரபலமானவர். சமீப காலமாக சினிமா குறித்தும், சீரியல்கள் குறித்தோம் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
இவர் தற்போது கருத்து தெரிவித்திருப்பது வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் திரைப்படம் பற்றி.
உங்க அசிங்கத்துக்கு மட்டும் ஜாதி வேணுமா?
இந்த படத்தை ஏற்கனவே எத்தனை பேர் அடித்து நொறுக்க முடியுமோ அத்தனை பேரும் செய்து விட்டார்கள். இதில் இப்போது புதிதாக லிஸ்டில் இணைந்திருப்பவர் தான் விஷ்வா.
பேட் கேர்ள் படத்தில் ஹீரோயின் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக காட்டி இருப்பார்கள். எதற்காக அந்த பெண்ணை இந்த சமுதாயத்தை சேர்ந்தவராக காட்ட வேண்டும்.
இந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் யாராவது இந்த வேலையை செய்து பார்த்திருக்கிறீர்களா.
அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் ஜாதி பற்றி பேசும்போது, அவர் ஜாதிகளை கடந்தவர் என பேசி முடிச்சீங்க. அமரனுக்கு ஜாதி இல்லை அப்போ உங்க அசிங்கத்துக்கு மட்டும் இந்த ஜாதி தேவைப்படுதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.