புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு.. நயன்தாரா கைவசம் இருக்கும் மாஸான 9 படங்களின் லிஸ்ட்!

Nayanthara: நயன்தாரா இனி அவ்வளவுதான், அவருடைய மார்க்கெட் மொத்தமாய் சரிந்து விட்டது. இதுபோன்ற செய்திகளை தான் சமீப காலமாக கேட்டிருப்போம்.

மொத்த நெகட்டிவ் செய்திகளுக்கும் தன்னுடைய கைவசம் இருக்கும் படங்களின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

ஒன்னு இல்லை, ரெண்டு இல்லை நயன்தாரா கைவசம் அடுத்தடுத்து ஒன்பது படங்கள் இருக்கின்றன.

மாஸான 9 படங்களின் லிஸ்ட்!

இயக்குனர் ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா மண்ணாங்கட்டி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே பிரபலமானவர்.

இதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.

நயன்தாரா தன்னுடைய 81ஆவது படத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் இணைய இருக்கிறார். கவின் உடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் ஹாய் என்னும் படத்தை இயக்குனர் விஷ்ணு இயக்குகிறார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் புகைப்படத்துடன் வெளியாகிவிட்டது.

இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடித்த டெஸ்ட் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்சில் வெளியாக இருக்கிறது.

இயக்குனர் சந்தீப் இயக்கத்தில் டியர் ஸ்டூடண்ட் என்னும் படத்தில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மேலும் இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் படத்திலும் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மேலும் நயன்தாரா. சோலோ ஹீரோயினாக நடிக்கும் ராக்காயி படத்தின் டீசரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது.

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்திருக்கும் படத்திலும் நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படம் இவருக்கு மலையாள சினிமா உலகில் பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News