சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்தி காதலை முடிச்சு விட்ட பார்வதி.. ஒரே கல்லில் 2 மாங்காய் அடிச்ச கதை ஆயிடுச்சே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

வில்லத்தனத்தில் மித்ராவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு மகேஷின் அம்மா பார்வதி திட்டம் போட்டு இருக்கிறார்.

அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காதலிப்பது தெரிந்தால் அதை மகேஷிடம் சொல்லிவிடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

அன்பு-ஆனந்தி காதலை முடிச்சு விட்ட பார்வதி

ஆனால் மித்ரா மற்றும் பார்வதி வேறு வகையான திட்டத்தை போட்டு விட்டார்கள். கம்பெனியில் எல்லோரும் முன்னிலையிலும் ஆனந்தியை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டார் பார்வதி.

அதாவது ஆனந்தி மகேஷ் காதலை ஏற்றுக் கொள்ளாததால் தான் மகேஷ் அவனுடைய அம்மாவை வெறுத்து ஒதுங்குகிறான்.

எப்படியும் ஆனந்தி அன்பு வை விட்டுக் கொடுத்துவிட்டு மகேஷ் திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.

இதனால் காதலுக்கு சம்மதம் தெரிவித்து மகேஷை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பார்வதி இறங்கி இருக்கிறார்.

அதே நேரத்தில் நெருக்கடி தாங்க முடியாமல் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் தங்களுடைய காதலை மகேஷிடம் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

இதனால் மகேஷ் இவர்கள் இருவரையுமே வெறுத்து ஒதுக்கி விடுவான். எப்படியாவது அவன் மனதை மாற்றி மித்ராவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவெடுத்து இருக்கிறார்.

ஒரு பக்கம் அழகப்பனும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் மகேஷ் மற்றும் ஆனந்தி இருவரும் திருமண மேடை வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment