Samantha: சமந்தா விவாகரத்திற்கு பிறகு நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி வருகிறார். அப்படித்தான் ஒரு பேட்டியில் தன்னுடைய நிஜ வாழ்க்கை ஹீரோவை பற்றி மனம் திறந்து இருக்கிறார்.
சமந்தா நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பிறகு ரொம்பவே உடைந்து போய் காணப்பட்டார். அவர் இன்னும் அந்த பிரிவிலிருந்து மீளவில்லை என்று கூட சொல்லப்படுகிறது.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் சினிமாவுக்கு வர ஒரே நபர் தான் காரணமாக இருந்தாராம். அது யார் என்றால் பாடகி சின்மயி உடைய கணவர்.
சமந்தா கொண்டாடும் அந்த நபர்
தன்னுடைய கஷ்டமான காலங்களில் தினமும் தன்னை நேரில் வந்து சந்தித்து ஊக்கப்படுத்தியது அவர்தான் என சொல்லி இருக்கிறார்.
மேலும் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு சமந்தாவின் மனதை மாற்றியதும் சின்மயி கணவர் தானாம். சமந்தாவுக்கு சின்மயி மூலம் தான் அவருடைய கணவரை தெரியும் என்று நினைத்தால் அது தான் தவறு.
சமந்தாவின் முதல் படமான மாஸ்கோவின் காவேரி படத்தின் ஹீரோதான் அந்த ராகுல். அந்த படத்திற்கு பிறகும் இருவருக்கும் நல்ல நட்பு தொடர்ந்து வருவது சமந்தா சொல்லும் செய்தியிலிருந்து தெரிகிறது.