
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் மதராஸி படத்தின் டைட்டில் இன்று காலை அறிவிக்கப்பட்டது. அத்துடன் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு பட குழு ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது. அதுவும் பழைய படத்தின் டைட்டில் என்பது கூடுதல் சர்ப்ரைஸ்.
ஏனென்றால் சிவகார்த்திகேயனுக்கும் பழைய பட டைட்டிலுக்கும் அப்படி ஒரு கனெக்சன் இருக்கிறது. தற்போது அவர் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
மதராஸி செகண்ட் லுக் போஸ்டர்
அதேபோல் அடுத்த படமும் பழைய பட டைட்டிலில் அமைந்திருக்கிறது. அதனால் நிச்சயம் படம் ஹிட் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை தெறிக்க விடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அதில் எஸ்கே ஐந்து அவதாரங்களில் இருக்கிறார்.
சீறும் ஐந்து தலை நாகம் போல் இருக்கிறது அவருடைய முரட்டு லுக். இதிலிருந்து படத்தில் எந்த அளவுக்கு ஆக்சன் அனல் பறக்கும் என்பது தெரிகிறது.
அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் இந்த செகண்ட் லுக் போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அதே போல் படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.