தமிழ், தெலுங்கு என கைவசம் 12 படங்கள் வைத்துக்கொண்டு பிஸியாக சுற்றி வருகிறார் அனிருத். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனிருத் 15 கோடிகள் சம்பளம் வாங்கி வருகிறார். இப்பொழுது அது மேலும் இரண்டு கோடிகள் உயர்ந்து 17 கோடிகளில் வந்து நிற்கிறது.
தற்சமயம் அனிருத் கமிட்டாகி இருக்கிற படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள். இந்த படங்களின் வேலைகளே தலைக்கு மேல் இருப்பதால் அடுத்தடுத்த படங்களை ஒப்புக்கொள்வதற்கு யோசித்து வருகிறார். இடையில் சிம்புவின் 2 படங்களையும் நீராகரித்துள்ளார்.
ஒரு படத்திற்கு 17 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். அதற்காக எப்படியும் ஐந்து பாட்டு, ரீ ரெகார்டிங், பேக்ரவுண்ட் மியூசிக் என சில மாதங்கள் உழைத்தால் மட்டும் தான் வேலைக்காகும். ஆனால் சமீபத்தில் இப்பொழுது இசையமைப்பாளர்கள் ஒரு கலாச்சாரத்தை கையில் எடுத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு சென்று ப்ரோக்ராம் நடத்துகிறார்கள். இதனை ஆல்பம் – கான்செர்ட் என்கிறார்கள். இதற்கு ஒரு நாளைக்கு ஐந்து கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார்கள். இப்படி குறுகிய நேரத்தில் அதிகமாக சம்பாதிப்பதாலும் அனிருத் புது படங்களை கமிட் செய்வதில்லை. சிம்பு 49 மற்றும் சிம்பு 51 இரண்டு படங்களையும் நிராகரித்துள்ளார் அனிருத்.
சிம்பு ஐம்பதாவது படத்தை மட்டும் யுவன் சங்கர் ராஜாவிடம் ஒப்படைத்துள்ளனர். இது கூட அனிருத் மனதிற்குள் சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கலாம். எல்லாத்துக்கும் மேல சிம்பு மீது அவருக்கு ஒரு மனக்கசட்டு இருக்கிறது போல், இல்லை என்றால் தனுஷ் நடிக்க போகும் அடுத்த படத்தை மட்டும் எப்படி ஓகே சொல்லி இருப்பார்.