சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத அதிசயம்.. இந்தியா வெற்றிக்கு வருணபகவான் வைத்த சூனியம்

ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்கவிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. 1998 இல் இருந்து இந்த போட்டிகள் நடந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் இது நாக்அவுட் போட்டிகளாக நடைபெற்றது ஆனால் இப்பொழுது புள்ளிகள் அடிப்படையில் நடக்கிறது.

இதுவரை நடைபெற்ற 8 தொடரிலும் இங்கிலாந்தைத் தவிர மற்ற பெரிய அணிகள் அனைத்தும் வெற்றியடைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணி மற்றும் இரு முறை இந்த கோப்பையை வென்றுள்ளது, நியூசிலாந்து பாகிஸ்தான், இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், என பெரிய அணிகள் அனைத்தும் ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்தியா இதில் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கோப்பையை அந்த அணிக்கு எதிராகவே வென்றுள்ளது. மற்றொரு முறை 2002ஆம் ஆண்டு இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்துள்ளது. அந்த போட்டியில் முதல் நாள் மழை குறிப்பிட்டதால் ஆட்டம் நிராகரிக்கப்பட்டது.

முக்கியமான ஆட்டத்தில் ரிசர்வ் டே எனப்படும் மறுநாளும் மழை பெய்ததால் இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றது என சமமாக கொடுத்து விட்டனர். மேலும் இதில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது ஆனால் வருண பகவான் வைத்த சூனியத்தால் பறிபோனது.

223 என்ற இலக்கை துரத்திய இந்தியா 8 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. சேவாக் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். அவருடன் சச்சின் களத்தில் நின்றார். முதலாவதாக களம் இறங்கிய தினேஷ் மோங்கியா மட்டும் அவுட் ஆகி இருந்தார். ஐசிசி வரலாற்றில் கோப்பையை இரு அணிகளுக்கும் பிரித்து கொடுத்தது இதுதான் முதல் முறை.

Trending News