Simbu: சிம்பு நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த தம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் ரக்ஷிதா. அதில் வரும் சாணக்யா சாணக்யா பாடல் இப்போதும் கூட பலரின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் இவர் விஜய் உடன் மதுர படத்திலும் நடித்திருக்கிறார். பிஸியாக இருந்த போதே இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

கன்னட இயக்குனரும் நடிகருமான பிரேமை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா பட தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார்.
சாணக்யா சாணக்கியா ரக்ஷிதாவா இது
அது மட்டும் இன்றி கன்னட தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். தற்போது இவருடைய போட்டோ வைரலாகி வருகிறது.
ஸ்லிம் பியூட்டியாக இருந்த இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வெயிட் போட்டுள்ளார். அவருடைய போட்டோவை பார்த்த ரசிகர்களால் இவர்தானா அது என கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோ வீடியோக்களை வெளியிடுவது உண்டு. அது ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ் ஆடியன்ஸ் அவரைப் பார்த்த ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.