Sivakarthikeyan: ஒரு காலத்தில் காமெடி ஜாம்பவானாக இருந்த சந்தானம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சபதம் போட்டிருக்கிறார். இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.
சிவகார்த்திகேயனுக்கு சீனியராக விஜய் டிவியில் கலக்கியவர் தான் சந்தானம். அவருக்கு தமிழ் சினிமா நகைச்சுவை மன்னன் என்ற பட்டத்தை கொடுத்து சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றது.
அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும்போது இரண்டு மூன்று படங்களில் காமெடி செய்து கடைசியில் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார்.
சிவா ஹீரோவாக நடிக்கும்போது, நான் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று சந்தானம் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
சந்தானத்தால் வாய்ப்புகளை இழந்த சிவகார்த்திகேயன்
ஆனால் அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருந்த படங்களில் முட்டுக்கட்டையாக இருந்தது சந்தானம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்த காலகட்டம் என்பது சந்தானம் காமெடியில் கிங்காக இருந்த காலகட்டம்.
சந்தானம் இருந்தால் தான் கூட்டம் தியேட்டருக்கு வரும் என்ற சூழ்நிலை. அப்போது அட்லி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அட்லி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர். அவரை வைத்து குறும்படங்கள் எல்லாம் இயக்கியிருக்கிறார்.
தன்னுடைய நண்பனை ராஜா ராணி படத்தின் மூலம் ஹீரோவாக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அட்லியை அடையாளப்படுத்தவே அந்த படத்திற்கு சந்தானம் தேவைப்பட்டு இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடி பண்ண மாட்டேன் என சொன்னதால் ஆர்யா அதில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
அதே போன்று ஜீவா, வினய் , சந்தானம் காம்போவில் உருவான படம் தான் என்றென்றும் புன்னகை. அந்த படத்தில் முதலில் வினய் கேரக்டரில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன்.
ஆனால் சில பல காரணங்களால் சிவகார்த்திகேயனால் அதை நடிக்க முடியவில்லை என ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.