AR Rahman: ஏ ஆர் ரகுமானின் மனைவி நேற்று இரவு தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில் திடீரென ஏற்பட்ட மருத்துவ அவசர நிலை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த நேரத்தில் அவருக்கு உதவிய, ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி என்றும் சொல்லியிருக்கிறார்.
மனம் திறந்த சாய்ரா பானு
இதில் முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருக்கும் ரசூல் பூக்குட்டி மற்றும் அவருடைய மனைவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் தன்னுடைய கணவர் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் ஏ ஆர் ரகுமான் உடன் இருந்த இத்தனை ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
ஆனால் நேற்றைய அறிக்கையில் திருமதி சாய்ரா ரகுமான் என குறிப்பிட்டு இருக்கிறார். இவர்களுடைய விவாகரத்து அறிக்கை உண்மையா, சாய்ராவுக்கு அப்படி என்ன உடல்நிலை பிரச்சனை என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.