Vijay TV: ஒரு சேனலில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் முக்கியமான ஆர்டிஸ்ட் தூக்குவது என்பது இப்போதைய TRP தந்திரம்.
அதை கணக்கச்சிதமாக முடிக்கக் கூடியவர்கள் விஜய் டிவி. அந்த சேனலையே தவிக்க விட்டு விடுவார்கள் போல ஜீ தமிழ் சேனல்.
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் முக்கியமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் பாகத்தை விட இந்த பாகத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
விஜய் டிவிக்கு ஆப்பு வைத்த சேனல்
சீரியல் முழுக்க தெரிந்த முகங்களாகவே இருக்க புதுமுகமாக வந்து ரசிகர்களை கவனிக்க வைத்தவர் தான் ஷாலினி. இவர் கதிரின் மனைவி ஆக ராஜி என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார்.
கதிரும் ராஜியும் இவ்வளவு நாட்களாக எலியும் பூனையும் ஆக இருந்தார்கள். இப்போதுதான் அவர்களுக்கு கெமிஸ்ட்ரி செட் ஆகியிருக்கிறது.
இந்த நேரத்தில் ஜீ தமிழில் கெட்டிமேளம் சீரியலில் வெற்றி கேரக்டருக்கு பெண் பார்த்து வருகிறார்கள்.
அப்போது பெண்ணின் போட்டோ என்று சொல்லி ஷாலினியின் போட்டோ தான் காட்டப்படுகிறது. இதனால் ஷாலினி விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவி விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.