திருமணத்தை மீறிய உறவில் லாஸ்லிய, புருஷனுக்காக மல்லு கட்டும் லிஜிமோல் .. ஜென்டில் வுமன் டீசர் எப்படி இருக்கு?

Gentle woman: ஜோஷ்வா சேதுராமன் எழுதிய இயக்கி இருக்கும் ஜென்டில் உமன் படத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தின் தலைப்பு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் டீசர் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் மலையாள நடிகை லிஜிமோல் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

ஜென்டில் வுமன் டீசர்

டீசரின் ஆரம்பத்தில் லிஜிமோல் தன்னுடைய கணவருடன் ரொம்பவும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் லிஜிமோல் கணவர் லாஸ்லியாவுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை காணவில்லை என்று லாஸ்லியா போலீசில் புகார் அளிக்கிறார்.

வீட்டிற்கு சென்று அவரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போதுதான் லிஜிமோல் இவர்கள் இருவருடைய உறவும் அவருக்குத் தெரியும் என்பது போல் சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் லாஸ்லியா அவரை தீவிரமாக தேட லிஜி மோல் தன் சொந்த கணவரை தேடாமல் இருப்பது போலீசுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது.

மேலும் லிஜி மோல் வீடு ரொம்பவும் அசாதாரணமாக இருக்கிறது.

சீசர் வீடியோ முடியும்போது எந்த மதத்திலும், ஜாதியிலும் பெண் எப்போதும் ஆணுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என லிஜி மோல் கோபத்துடன் சொல்வது போல் வசனம் இருக்கிறது.

அவருடைய கணவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ் ஆக இருக்கக்கூடும்.

Leave a Comment