ஹனிமூன் முடிந்த கையோடு அனுயாவுடன் கசமுசா.. பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த நடிகர் ஜீவா

Actor Jiiva: நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றியும் ரொம்பவும் வெளிப்படையாக பகிர்ந்து இருந்தார்.

அப்போதுதான் நடிகை அனுயா பற்றிய சீக்ரெட் ஒன்றையும் சொல்லியிருந்தார். நடிகை அனுயா ஜீவாவுடன் இணைந்து சிவா மனசுல சக்தி என்னும் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ஜீவாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஜீவா மற்றும் சந்தானம் காம்போவில் வரும் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

சீக்ரெட்டை பகிர்ந்த நடிகர் ஜீவா

அது மட்டும் இல்லாமல் நடிகை ஊர்வசி இவர்கள் இரண்டு பேரையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு காமெடியில் கலக்கி இருப்பார்.

படம் முழுக்க காமெடி காட்சிகள் தான் என்றாலும் படத்தின் கடைசியில் ஜீவா மற்றும் அனுயா இருவருக்கும் ரொமான்டிக்கான பாடல் காட்சி ஒன்று இருக்கும்.

இந்த படப்பிடிப்பு நடந்த சமயம் தான் ஜீவாவுக்கு திருமணம் நடந்திருந்ததாம்.

மனைவியுடன் ஹனிமூன் முடித்து வந்த கையோடு இந்த பாட்டின் படப்பிடிப்பில் ஜீவா கலந்து கொண்டது அவருக்கு ஒரு வித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக சொல்லி இருக்கிறார்.

அதற்கு காரணம் அவர் மனைவி என்று நினைத்துக் கொள்வாரோ என்பதுதான். அவருடைய மனைவி தியேட்டரில் படம் பார்க்கும்போது ஜீவாவை லேசாக முறைத்தாராம்.

பெரிய அளவில் வேறு எந்த சண்டையும் போடாததற்கு காரணம் நடிகை அனுயா ஜீவாவின் மனைவிக்கு நெருங்கிய தோழியாம்.

Leave a Comment