Jyothika: நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் நேற்று பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு காரணம் ஜோதிகாவின் அதிரடியான மாற்றம் தான்.
நமக்கு தெரிந்தவரை ஜோதிகா என்றால் பூசினால் போன்ற உடம்பு, குறும்புத்தனமான அழகுதான் ஞாபகம் வரும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகா தன்னுடைய பிட்னஸ் பயணத்தை ஆரம்பித்தார்.
திரிஷா போல் ஒல்லியாக மாறிய ஜோ
தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இது பலருக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது.
உடற்பயிற்சியின் பலனாக ஜோதிகா வெகுவாக தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார்.
90களின் காலகட்டத்தில் பிட்னஸில் சிம்ரனுடன் போட்டி போட முடியாவிட்டாலும், இப்போது 46 வயதில் த்ரிஷாவுடன் போட்டி போடும் அளவுக்கு உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்.
46 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

