செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

மொத்தமாய் பழிக்கப்படும் இந்திய அணி.. நன்றாக விளையாடுவதால் பொறாமையில் பொங்கும் மூத்த வீரர்கள்

ஒன்பதாவது சாம்பியன் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால் பாதுகாப்புக் கருதி இந்தியா அங்கு விளையாட மறுத்ததால் பக்கத்து நாடான துபாயில் இந்தியாவிற்கான போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதுதான் இப்பொழுது மற்ற அணி வீரர்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி உள்ளது. முன்னாள் வீரர்கள் பல பேர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். போட்டி பாகிஸ்தான் நடத்துகிறது ஆனால் இந்தியாவிற்கே முழு சாதகமாய் இருக்கிறது. ஹோம் டீமிற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.

இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. இதில் இந்தியாவிற்கு எந்த மாற்றமும் இல்லை மற்ற அணிகள் அனைத்தும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடுகிறது. அவர்கள் மைதானத்திற்கு தகுந்தார் போல் தங்கள் அணியை மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் கூட மாற்ற வேண்டாம்.

இந்த மைதானம் இப்படித்தான் இருக்கும் என முழுவதையும் அறிந்து விடுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தங்கள் அணியை கட்டமைக்கிறார்கள். குறிப்பாக சூழல், வேகப்பந்துவீச்சு என அணிக்குள் ஒவ்வொரு வீரர்களையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த நடைமுறை குறித்து முன்னாள் வீரர்கள் பல பேர் கொந்தளிக்கிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன், வாசிம் அக்ரம், ஜாவித் மியாந்தத் போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்கக் கூடாது, மாறாக பாகிஸ்தானில் விளையாட மறுத்தால் அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியை விட்டு வெளியேறலாம் எனவும் கூறி வருகிறார்கள்.

Trending News