புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

கார்த்தியை நம்பி கோடிக்கணக்கில் இறக்கும் B4U.. மெய்யழகனுக்கு அடிக்கும் ட்ரிபிள் ஜாக்பாட்

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு கார்த்தி நடித்து எந்த படமும் ஹிட் ஆகவில்லை. ஜப்பான், மெய்யழகன் போன்ற படங்கள் அவருக்கு பெரிய அடியாக அமைந்தது. இதில் ஜப்பான் படம் தயாரிப்பாளரை கடும் நெருக்கடிக்குள்ளாகியது. மெய்யழகன் படம் கூட ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது.

இப்பொழுது கார்த்தி நடிக்கும் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் இறக்கியுள்ளனர். இதுதான் கார்த்தி கேரியரில் அதிக பட்ஜெட்டில் செலவு செய்து எடுக்கப்பட்ட படம்.ஏற்கனவே முதல் பாகம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. அதனால் இரண்டாம் பாகத்திற்கு மொத்த காசையும் இறக்கி செதுக்கி வருகிறார்கள்.

2022ஆம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்தார். ஆக்சன் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்பொழுதே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் கார்த்தி பல படங்களில் கமிட்டாகி இருந்ததால் இப்பொழுது இதை எடுத்து முடித்துள்ளனர்.

சர்தார் படத்தின் முதல் பாகம் வெறும் 30 கோடியில் எடுக்கப்பட்டது ஆனால் இப்பொழுது இரண்டாம் பாகத்திற்கு மூன்று மடங்கு உயர்த்தி 100 கோடிகள் வரை பட்ஜெட்டை இறக்கியிருக்கிறார்கள் கார்ப்பரேட் நிறுவனமான B4U. படத்தில் முக்காவாசி காட்சிகள் சீனாவில் நடைபெறுவதால் இவ்வளவு செலவு செய்துள்ளனர்.

கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக சீனா போல் செட் அமைத்து எடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. இதை முழுவதுமாக முடித்துவிட்டு கைதி 2 படத்தில் இணைகிறார் கார்த்தி. சர்தார் 2,, கைதி 2, வா வாத்தியாரே, பார்ட்டி என அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் படங்கள் குவிந்து வருகிறது.

Trending News