Pooja Hegde: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மற்ற மொழிகளில் அந்த அளவுக்கு ஹிட் பட ஹீரோயின் என்ற பெயர் கிடையாது.
ஆனால் தமிழ் சினிமாவில் இவர் நடித்த முதல் படமான பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.
பாலிவுட் சினிமா இவரை ராசி இல்லா ஹீரோயின் என்று ஒதுக்கி இருந்தாலும் பூஜா கை வசம் இருக்கும் நான்கு தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.
கை வசம் இருக்கும் 4 தமிழ் படங்கள்!
ஜன நாயகன்: பீஸ்ட் படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் இணைந்திருக்கிறார். விஜயின் கடைசி பட ஹீரோயின் என்பதால் இவருக்கு தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மவுசு அதிகம்.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் ரெட்ரோ.
பல வருடங்களுக்குப் பிறகு ரொமான்டிக் கதையை தேர்ந்தெடுத்திருக்கும் சூர்யாவுக்கு ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி: தமிழ் சினிமா வட்டாரத்தில் சுட சுட வெளியாகி இருக்கும் அப்டேட் தான் பூஜா ஹெக்டே ரஜினியின் கூலி படத்தில் இணைந்திருப்பது.
ஜெயிலர் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியதை தொடர்ந்து தற்போது கூலி படத்தில் பூஜா ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.
காஞ்சானா 4: ராகவா லாரன்ஸ் எடுக்கும் பேய் சீரிஸ் படங்கள் எப்போதுமே அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கும்.
காஞ்சனா மூன்று பாகங்களை தொடர்ந்து தற்போது நான்காவது பாகம் வர இருக்கிறது. இதில் முக்கியமான கேரக்டரில் பூஜா நடிக்க இருக்கிறார்.