Simbu: விஜய் சினிமாவில் தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் இருக்கும் பொழுது சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த துப்பாக்கியை புடிங்க சிவா என்ற வசனத்தை வேற லெவலில் டிரெண்டாக்கினார்கள்.
அடுத்த தளபதி, திடீர் தளபதி என்று பல பட்டங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் கட்ட ஹீரோக்கள் பலரும் தங்களுக்கான வெற்றிப் பாதையை வித்தியாசமாக வகுத்துக் கொண்டிருப்பதால் கமர்ஷியல் படங்களில் சிவா தான் இனி கிங் என்று இருந்தது.
நின்னு ஆட போகும் சிம்புவின் 4 படங்கள்
அதை மொத்தமாக தட்டி தூக்க சிம்புவின் நான்கு படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் 38 வருடங்களுக்குப் பின் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் வரும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஹரிஷ் கல்யானை வைத்து பார்க்கிங் என்னும் படத்தை டீசன்ட் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர் சிம்புவின் 49 ஆவது படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார். இந்த படமும் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக இருக்கிறது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் அவருடைய ஐம்பதாவது படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51 வது படத்தை இயக்குகிறார்.
இப்படி அடுத்தடுத்து சிம்பு ஹிட் படங்கள் தான் கொடுக்கப் போகிறார் என்பது முன்னமே உறுதியாகிவிட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் துப்பாக்கியை எங்க தலைவன் கிட்ட கொடுத்துடுங்க சிவா என ட்விட்டரில் தங்களுடைய அட்ராசிட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.