ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகிவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. நாளை நடக்கும் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதுகிறது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் போட்டிகளை நடத்தும் பாகிஸ்தான் நாடு இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இதுதான் அவர்களுக்கு பெரும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே இந்தியா உடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த நாட்டு ஊடகங்கள்
வாய்க்கு வந்தபடி பேசி வருகிறது. இந்தியா மாந்திரீகம் செய்துவிட்டது. ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு மந்திரவாதிகளை வைத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு செய்வினை வைத்து விட்டார்கள் என கூறினார்கள்.
இப்பொழுதும் பாகிஸ்தான் மூத்த பயிற்சியாளரான இண்டிகாப் ஆலம், பாபர் அசாம் உடன் விராத் கோலியை ஒப்பிட்டு மூளை இல்லாமல் பேசி உள்ளார். அவர் முன்னாடி விராட் கோலி பூஜ்ஜியம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். எந்த ரெக்கார்டை வைத்து இவர் இப்படி பேசுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்திய அணியை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்பதுதான் அவர்கள் குறிக்கோள்.
ஏற்கனவே இந்திய அணிக்கு ஏற்றவாறு ஐசிசி நிறைய விஷயங்களில் தலையாட்டி பொம்மையாய் செயல்படுகிறது . பாகிஸ்தானில் வந்து விளையாடமறுத்து வரும் இந்திய அணிக்கு நிறைய சலுகைகள் கொடுக்கிறது. அவர்களுக்கு உண்டான போட்டிகள் துபாயில் மட்டும் நடக்கிறது என ஏதாவது குற்றம் குறைகளை கூறிக்கொண்டே இருக்கிறது பாகிஸ்தான் ஊடகங்கள்.