செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளரா இவர்தான் வரணும்.. சொன்ன மாதிரி ஹெட்டை தூக்கிய வருண்

தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பயிற்சியின் கீழ் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது.

டாஸ் ஜெயித்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் எப்பொழுதும் நமக்கு தலைவலியாக இருப்பது இரண்டு வீரர்கள். ட்ராவிஷ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இவர்கள் இருவரும் தான் இந்திய அணிக்கு சவால் விட்டு விளையாடும் ஆட்டக்காரர்கள்.

இன்றைய போட்டியில் இந்தியா மூன்று ஸ்பின்னர்கள் உடன் களமிறங்குகிறது. ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், மற்றும் வருண் சக்கரவர்த்தி. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர்கள் மூவரும் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள். இவர்கள் சிறப்பாக வீசினால் இந்தியாவிற்கு வெற்றி உறுதி.

ட்ராவிஷ் ஹெட் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அதிரடி ஆட்டம் ஆடும் எண்ணத்தோடுதான் களமிறங்குவார். இவர் ஆடுகையில் வருண் சக்கரவர்த்தி கையில் புதுப்பந்தை கொடுக்கலாமென அஸ்வின் அறிவுறுத்தி இருந்தார். அதைப்போலவே இன்று கொடுத்து ட்ராவிஷ் ஹெட்டை ஆட்டமிழக்க செய்தது இந்திய அணி.

இப்படி சொல்லி வைத்ததை போல் யூகங்களை வகுத்துள்ளார் அஸ்வின். இவர் வீசக்கூடிய 6 பந்துகளையும் வெவ்வேறு கோணத்தில் வீசக்கூடிய திறமை கொண்டவர். சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர் அடுத்து இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் ஜாக்பாட் தான்.

Trending News