
Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஒவ்வொரு படத்திற்கும் அபரிவிதமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் நல்ல வசூலை பெற்று சிவகார்த்திகேயனுக்கு பெயரையும் வாங்கி கொடுத்தது.
இந்த சூழலில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் 2018 என்று கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்திருந்தார்.
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சிம்பு வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. இப்போது அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் என்ன டுவிஸ்ட் என்றால் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா
இப்போதெல்லாம் ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஹீரோவாக ஆர்யா நடிக்கும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. கடைசியாக அவர் ஹிட் கொடுத்த படம் என்றால் சார்பட்டா பரம்பரை.
இந்த சூழலில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். முதல்முறையாக இந்த காம்போ இணைவதால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதுவரை ஹீரோவாக பார்த்த ஆர்யா வில்லனாக எப்படி இருப்பார் என்ற அனுபவத்தையும் இந்த படம் காட்ட இருக்கிறது. மேலும் மார்க்கெட் இல்லை என்பதால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் சாதுரியமாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் ஆர்யா.