புதன்கிழமை, மார்ச் 12, 2025

சிங்கத்தனம் அல்ல நரித்தனம் என்று பழித்த அப்ரிடி.. வயிற்றேரிச்சலில் மொத்த பொறாமையும் கக்கிய பூம்பூம் 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரின் கோப்பையை வென்ற இந்திய அணியை மொத்த பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் பழித்து வருகிறார்கள். இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்கள் நாட்டில் நடத்தியது. பாதுகாப்பு கருதி இந்திய அணி அங்கு விளையாட மறுத்தது.

 இது ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் நாட்டிற்கு பிடிக்கவில்லை. பொதுவாகவே இந்திய அணி ஒரு போட்டியை வென்றால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மொத்தமாய் அவசொற்களால் பழித்து பேசுவார்கள். இப்பொழுது அந்த நாட்டு முன்னாள் அதிரடி வீரர் சாகித் ஆப்ரிடி இந்தியாவை மிகவும் கீழ்த்தனமாக பேசியுள்ளார்.

 இந்திய அணி சிங்கங்கள் பெற்ற பிள்ளை இல்லை அவர்கள் நரித்தனம் செய்து விட்டார்கள் என மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பாகிஸ்தானில் வந்து விளையாடாமல் ஒரே மைதானம், ஒரே இடம் என தெருவில் விளையாடும் சிறு பிள்ளைகள் போல் விளையாடி கோப்பையை வென்று விட்டார்கள் என பொங்கி வருகிறார்.

 அவர்கள் பாகிஸ்தானில் வந்து விளையாடி அவர்களின் திறமையை காட்ட வேண்டும், மாறாக இப்படி விளையாடி கேவலப்படுத்தி விட்டார்கள். உண்மையான கிரிக்கெட் என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஒரே மைதானம், இடம் என எல்லா போட்டிகளையும் நரித்தனம் செய்து வென்று விட்டார்கள் என பேசியுள்ளார்

 பாகிஸ்தான் நாட்டில் மிகவும் மதிக்கத்தக்க வீரராக வலம் வந்தவர் சாகித் அப்ரிடி. இந்திய நாட்டினரும் அவர் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். ஆனால் இப்படி பேசி மொத்த மரியாதையையும் நொறுக்கி விட்டார் அப்ரிடி. மிகவும் நியாயமான மனிதராக இருப்பவரா  இப்படி பேசுகிறார் என கொந்தளித்து வருகிறது இந்தியா.  

Trending News