வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

3 மணி நேரம் ஸ்டிரஸ்சை குறைக்கும் கமலின் ஐந்து படங்கள்.. சந்தேகப் பேர்வழி சிங்காரத்துடன், ராமலிங்கம் அடிக்கும் லூட்டி

மகாநதி, குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என போய்க்கொண்டிருந்த கமல் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் முழு நேர நகைச்சுவை படங்கள் மீது கவனம் செலுத்தினார். அப்படி அவர் மாற்றிய ட்ராக்கிற்கு வரவேற்பு ஏராளமாய் கிடைத்தது. இதில் இன்று வரை பார்க்க பார்க்க சிரிப்பு மூட்டும் 5 படங்கள்

அவ்வை சண்முகி: குருதிப்புனல், இந்தியன் என ஒரு மாதிரி போலீஸ் படங்களாக போய்க் கொண்டிருந்த கமலின் சினிமா கேரியருக்கு நகைச்சுவையில் சரியான தீனி போட்ட படம் அவ்வை சண்முகி.1996இல் வெளிவந்த இந்த படத்தை இப்பொழுது பார்த்தாலும் சலிக்காது.

காதலா காதலா: கமல், பிரபுதேவா, வடிவேலு அனைவரும் இந்த படத்தில் செம லூட்டி அடித்திருப்பார்கள். ஒரு திக்குவாய் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு படம் முழுவதையும் மிக காமெடியாக கொண்டு போய் இருப்பார்கள். மிலிட்டரியில் இருந்து வரும் வடிவேலு சிங்காரம் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.

தெனாலி: தெனாலி சோமனாக இலங்கை தமிழர் கதாபாத்திரத்தில் ஜெயராமுடன் கமல் வைத்திருப்பார். டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா என ஒரு பெரிய நகைச்சுவை நடிகர்கள் கூட்டங்களோடு இந்த படம் பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்தது. கடைசி வரை வயிறு குலுங்க சிரிக்கலாம்.

பஞ்சதந்திரம்: ஐந்து பேர் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு அடிக்கும் லூட்டி தான் இந்த படத்தின் கதை. யுகி சேது, ஜெயராம், ரமேஷ் அரவிந்த், என கமலின் கமலின் நண்பர்களாக வரும் அனைவரும் இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக வெளிவந்தது பஞ்சதந்திரம்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: வயதான பிறகு டாக்டர் பட்டத்திற்காக போராடும் ராஜா ராம் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். அவருக்கு சரி சமமாக பிரகாஷ்ராஜும் இந்த படத்தில் தன்னுடைய பங்கிற்கு அசத்து இருப்பார். மூன்று மணி நேரம் நம்முடைய கவலையை மறக்க வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம்.

Trending News