ரிட்டையர்டு மாஸ்டர்களை வைத்து நடத்தப்படும் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் ஏழு நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது. வயதானாலும் நாங்கள் சிங்கங்கள் தான் என எதிராணியினரை கதற கதற வேட்டையாடி இறுதி போட்டிக்கு சென்று விட்டார்கள் இந்திய மாஸ்டர்கள்.
இந்தத் தொடரில் சச்சின், யுவராஜ் சிங், இர்பான் பதான், பின்னி போன்ற சீனியர் வீரர்கள் அபாரமாக விளையாடி வருகிறார்கள். 16ஆம் தேதி நடக்க உள்ள இறுதி போட்டியில் மேற்கிந்திய அணிகளுடன், இந்திய அணி மோத உள்ளது. இரண்டு அணிகளுமே சமமான பலத்தில் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்கள் அணியை விரட்டி அடித்தது இந்தியா. அந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய யுவராஜ் சிங் 30 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடங்கும்.
ஓப்பனிங் இறங்கி விளையாடிய சச்சின் தன் பங்கிற்கு 30 பந்துகளை சந்தித்து 42 ரன்களை குவித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் குவித்தது.பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா மாஸ்டர் அணியினர் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படுதோல்வி அடைந்தனர்.
இந்த போட்டியில் யுவராஜ் அடித்த ஏழு சிக்ஸர்களும் 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டுவர்ட் போர்டு பந்தில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்ததை ஞாபகப்படுத்தி உள்ளது. வயதானாலும் சிங்கம் தான் என தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் யுவராஜ் சிங்.