Coolie: யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கண்ணதாசன் எழுதியிருப்பார். தற்போது அது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சரியாக பொருந்தி இருக்கிறது.
லோகேஷ் விக்ரம் படம் பண்ணிய சமயத்தில் ரஜினிக்கு அவருடன் பணிபுரிய பேராசை. ஆனால் அவர் ரஜினியுடன் பணிபுரிய தொடங்கும் பொழுது அவர் இயக்கிய லியோ படம் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தது.
இதனால் லோகேஷ் பெயர் கொஞ்சம் அடி வாங்கவும் ஆரம்பித்தது. இதன் தாக்கம் OTT வியாபாரம் வரை லோகேஷ் கனகராஜை சுழற்ற விட்டு இருக்கிறது.
கூலி OTT வியாபாரம்
சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படம் அமேசான் நிறுவனத்தால் 120 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் தக் லைப் படம் 147 கோடிக்கு netflix நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் சமீபத்திய தடுமாற்றம் தான் இதற்கு காரணம் எனவும் பேசப்படுகிறது.