ஒரே திரையை பகிர்ந்து கொண்ட 10 ரியல் அப்பா-மகன்.. சிம்புவை செதுக்கிய டிஆர்

Tr-simbu
Tr-simbu

Simbu: சினிமா பிரபலங்கள் தங்களது வாரிசுகளை எப்படியாவது அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் எந்த தவறும் இல்லை. வாரிசுகள் வந்தாலும் திறமை இருந்தால் அவர்கள் ஜொலிப்பார்கள். அவ்வாறு ஒரே படத்தில் இணைந்த பத்து அப்பா, மகன்களை இப்போது பார்க்கலாம்.

சிவாஜி கணேசன் தனது மகன் பிரபுவின் முதல் படமான சங்கிலி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். ஆனாலும் சிவாஜி இடத்தை பிரபுவால் நிரப்ப முடியவில்லை.

எஸ்ஏ சந்திரசேகர் தனது இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய்யை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு சுக்ரன் படத்தில் இருவரும் இணைந்துநடித்திருந்தனர்.

விஜயகுமார் மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர். அதில் பாண்டவர் பூமி படத்தில் இருவரும் அப்பா மகனாகவே நடித்திருந்தனர்.

சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சினிமாவில் கதாநாயகனாக இருக்கிறார்கள். இதில் சூர்யா மற்றும் சிவகுமார் இருவரும் உயிரிலே கலந்தது படத்தில் நடித்திருந்தனர்.

அப்பா, மகன் இணைந்து நடித்த படங்கள்

சிம்புவை குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகம் படுத்தினார் அவரது தந்தை டி ராஜேந்தர். இவர்கள் இருவரும் நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். டி ஆரின் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் வெற்றிவேல் சக்திவேல் படத்தில் ஒன்றாக திரையை பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு ஜோர், ஜாக்சன் துரை, கோவை பிரதர்ஸ் என பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். அதன் பிறகு சாந்தனுவின் சித்து +2 படத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார்.

நடிகர் கார்த்தி தனது மகன் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடித்திருந்தார்.

முரளி தனது மகன் அதர்வாவுடன் பானா காத்தாடி படத்தில் நடித்திருந்தார். இது அதர்வாவின் அறிமுக படமாகும்.

கருணாஸின் மகன் கென் அசுரன் படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். மேலும் இவர்கள் இருவரும் அழகு குட்டி செல்லம் படத்தை இணைந்து நடித்திருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner